
Posted by admin on 2012-07-25
எமது இல:. 02/ACJU/F/2010/0115
2010.01.21
1431.01.04
நெருங்கிய
உறவினர்களுக்கு ஸக்காத் கொடுத்தல்
ஸக்காத் கொடுக்கும் போது தனது உறவினர்களுக்கு
முன்னுரிமை வழங்கவேண்டும். நபி (சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு
கூறியுள்ளார்கள்:
“நிச்சயமாக ஏழைக்கு சதக்கா செய்வது
சதக்காவாகும் உறவினர்களுக்கு சதக்கா செய்வது சதக்காவும் உறவைச் சேர்ந்து
நடத்தல் ஆகிய இரண்டுமாகும்.“
(நூல்: ஸுனன் அல்-திர்மிதி, அறிவிப்பவர்: ஸல்மான் இப்னு ஆமிர் (ரழியல்லாஹ{ அன்ஹு), பாடம்: உறவினருக்கு சதக்கா கொடுப்பது பற்றி
வந்தவை)
தனது
தாபரிப்பின் கீழ் உள்ளவர்களுக்கு அவர்களது செலவுகளை கொடுப்பது தன் மீது கடமை
என்பதால் பக்கீர்கள், மிஸ்கீன்கள், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு தனது ஸக்காத்தை வழங்கக் கூடாது.
என்றாலும் கடனாளிகள், ஸக்காத்
பணியாளர்கள், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகள்,அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள் என்ற
வகையில் அவர்களுக்கு தனது
ஸக்காத்தைக் கொடுக்கலாம்.
இமாம் நவவி
(ரஹிமஹுல்லாஹ்) தனது நூலான அல்-மஜ்மூஃவில் ஸக்காத்களை பகிர்ந்தளித்தல் பாடத்தில்
மேற்படி கருத்தை விளக்கியுள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
more Visit: http://www.acju.lk/fatwas.php?fid=12
more Visit: http://www.acju.lk/fatwas.php?fid=12