Posted by admin on 2012-12-11

எமது இல.: 06/ACJU/F/2010/119
2010.01.21
1431.01.04
சகோதரர் அப்துல்லாஹ் உஸ்மான்.
45/9, கல்பொக்க வீதி,
வெலிகம.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
வியாபார பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் போது இலஞ்சம் வழங்கல்
வியாபார பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் போது இலஞ்சம் வழங்குவது சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட திகதியிடப்படாத கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்,அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இலஞ்சம் கொடுத்தல், எடுத்தல் இரண்டுமே பெரும் பாவமாகும்.
“அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இலஞ்சம்;கொடுப்பவரையும், இலஞ்சம் எடுப்பவரையும்; சபித்தார்கள்;.”
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல்: ஸுனன் அபீ தாவூத், பாடம்: இலஞ்சத்தை வெறுத்தல்)
தனது காரியங்களை இலஞ்சம் கொடுக்காமல் செய்துகொள்ளவே எப்பொழுதும் முடிந்தளவு முனைய வேண்டும். அவ்வாறு முடியும் தருணத்தில் இலஞ்சம் வழங்குவது ஹராமாகும். எனினும் இலஞ்சம் கொடுக்காமல் தனது காரியங்களை செய்துகொள்ள முடியாத நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால், இத்தருணத்தில் இலஞ்சம் கொடுப்பதால் இறைவனிடம் குற்றவாளியாக கணிக்கப்படமாட்டார். இலஞ்சத்தை எடுப்பவருக்கே அதன் பாவம் சேரும்.
தனது உரிமையை அடைந்துகொள்வதற்காக ஆட்சியாளருக்கு இலஞ்சம் கொடுப்பதை ஒரு விதிவிலக்கான சந்தர்ப்பமாக இமாம் ஸுயூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்-அஷ்பாஹ் வ-அல்-நளாலாஇர் எனும் அவர்களின் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
more visit: http://www.acju.lk/fatwas.php?fid=22
more visit: http://www.acju.lk/fatwas.php?fid=22