.

வரட்சி நீங்கவும் மழை பொழியவும் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்

இந்நாட்களில் நிலவி வரும் வரட்சி காரணமாக பயிர்பச்சைகள் நாசமாகியும் தேவையான தண்ணீர் இல்லாமலும் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது காலத்தின் தேவையாகும்.


அசாதாரண நிலமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் அவசியமாகும். சமூகத்தில் வளர்ந்து வரும் பாவகாரியங்கள் காரணமாக நாம் சோதிக்கப்படலாம். தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதாலோ குறைந்து விடுவதாலோ மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வரட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.
அல்லாஹ் நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
More CLICK:
http://www.acju.lk/ta/press-release-ta/prayforrain/