திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார்.
- எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல்.
- இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல்.
- கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல்.
- கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல்.
- வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல்.
- அதிகமாகப் பேசுதல்
மேற்கண்ட குணங்களைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.